மலைக்கோட்டை கோயிலில் தீப திருவிழா; 300 மீட்டர் திரி தயாரிக்கும் பணி துவக்கம்
மலைக்கோட்டை கோயிலில் தீப திருவிழா;
300 மீட்டர் திரி தயாரிக்கும் பணி துவக்கம்
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 3.12.2025 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் அருள்மிகு செவ்வந்தி விநாயகர் அருள்மிகு தாயுமான சுவாமி மற்றும் அருள்மிகு மட்டுவார் குழலம்மை உற்சவமூர்த்திகளுக்கு தீபாரதனை செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு அருள்மிகு உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள 40 அடி உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து அடி உயரமுள்ள செப்பு கொப்பரையில் 300 மீட்டர் பருத்தி துணிகளால் செய்யப்பட்ட திரியில் 700 லிட்டர் இலுப்பை எண்ணெய் நல்லெண்ணெய் நெய் ஆகியவை கலந்து ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட விருக்கிறது.
கார்த்திகை தீப திருவிழாவின் ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் பா.சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள் கருணாநிதி, கலைச்செல்வி, ஸ்ரீதர், கோவிந்தராஜு மற்றும் திருக்கோயில் உதவி ஆணையர்ரும், செயல் அலுவலருமான கா.அருட்செல்வன் மற்றும் உள்துறை கண்காணிப்பாளர் , பேஸ்கார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் நடைபெற விருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திற்கான 300 மீட்டர் திரி தயாரிக்கும் பணி துவங்கியது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0