பஞ்சப்பூர் புதிய மார்க்கெட்டில் எங்களுக்கும் இடம் கொடுங்கள்; திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்

Nov 17, 2025 - 20:53
 0  38
பஞ்சப்பூர் புதிய மார்க்கெட்டில் எங்களுக்கும் இடம் கொடுங்கள்; திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம்

பஞ்சப்பூர் மார்க்கெட்டில் எங்களுக்கும் இடம் கொடுங்கள்; திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் தலைமையில், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சபி அகமது, கூடுதல் செயலாளர் மந்தை ஜெகன், துணைச் செயலாளர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் சரவணனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு எதிரே பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி சுமார் 22 ஏக்கரில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த அங்காடி யாருக்காக கட்டப்படுகிறது என தெரியவில்லை. அதேநேரம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு அந்த அங்காடியில் கடை ஒதுக்கி தர வேண்டும்.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சிறு, மொத்த வியாபாரிகள் 2000 பேர் உள்ளனர். இவர்கள் காந்தி மார்க்கெட்டில் தரைக்கடைகள், செட் அமைத்த தரைக்கடைகள், உள் வாடகை கடைகள் போன்றவற்றில் வணிகம் செய்து சிரமப்பட்டு வருகின்றனர். 

இந்த வணிகர்களின் வருங்கால தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சிறு மொத்த வணிகர்களுக்கு பஞ்சப்பூர் காய்கனி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கித் தர வேண்டும்,

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் போல் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படும் கடைகளை அவர்களது பெயரில் கிரயம் செய்து கொடுக்க வேண்டும், பஞ்சப்பூரில் காய்கறி மார்க்கெட்  கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் காந்தி மார்க்கெட்டில் உள்ள சிறுகுறு, மொத்த வியாபாரிகளை மாவட்ட ஆட்சியர் அழைத்து ஆலோசனை நடத்திட வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். 

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0