இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தலை நடத்தக்கூடாது - தமிழக மக்கள் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Nov 17, 2025 - 16:43
 0  4
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தலை நடத்தக்கூடாது - தமிழக மக்கள் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தேர்தலை நடத்தக்கூடாது - தமிழக மக்கள் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை நடத்தக்கூடாது என தமிழக மக்கள் முன்னணி அமைப்பினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தை திருச்சியில் நடத்தினர். இது குறித்த விபரம் வருமாறு;

தமிழகம் முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து திமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணிகளை கண்டித்தும், கண்டனங்களை தெரிவித்தும் கூட்டணி கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதன் ஒரு தொடர்ச்சியாக தமிழக மக்கள் முன்னணி உடன் இணைந்து தமிழ் தேசிய மக்கள் விடுதலைக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட14 இயக்கங்கள் ஒன்றிணைந்து

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தேர்தல் ஆணையத்தின் வழியான சிறப்பு தீவிர திருத்தத்தின் வழி கணக்கெடுக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், மாநிலங்களின் தேர்தல்கள் நடத்துகிற உரிமையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் நடத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

தமிழக மக்கள் முன்னணியினர் மற்றும் மக்கள் தமிழக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நிலவழகன் தலைமையில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பொழிலன், ஜெயராமன், சீனி விடுதலை அரசு, கென்னடி, கோவன், வழக்கறிஞர் பானுமதி, அரசெழிலன், வின்சன்ட், குமார், ஜெகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போராட்ட குழு தலைவர் பொழிலன், இன்றைக்கு தேர்தல் அமைப்பு முறைகள் அடிப்படையில் மாநில உரிமைகளை நசுக்குவதாக தொடர்ந்து செயல்பட்டு புதுப்புது திட்டங்களை கொண்டு வருகிறது.

 எஸ் ஐ ஆர் என்கிற பெயரில் வாக்குரிமையை பணம் படைத்தவர்களுக்கோ, நில உடமை தாரர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டதோ என்ற நிலை நிலை தற்பொழுது மாற்றப்பட்டு வருகிறது. 

குலக்கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவற்காக புதிய கல்விக் கொள்கையாக நீட் நுழைந்தது போலவே தேர்தல் ஆணையத்திணை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து ஒரு புதிய நடைமுறையை இந்த நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை தேர்தல் வாக்குரிமையை நசுக்குகிற பெரிய முயற்சியாக இந்த சிறப்பு தேர்தல் திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர்.

13 ஆதாரங்கள் என்பதை கொண்டு வந்து இலட்சக்கணக்கான பீகார், மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களை இங்கு கொண்டு வந்து திணித்து அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டும், நோக்கத்தோடு அவர்கள் வாக்களித்து பாஜகவுக்கு ஆதரவாக அவர்கள் இருக்கும் இடத்தில் வாக்குரிமை இல்லை என்று அடையாளத்தை சான்றுகளை இங்கு கொடுத்தால் போதும் என்கிற 13-வது இணைப்பையும் செய்துள்ளனர். திட்டமிட்டு பெரிய சூழ்ச்சியை பாஜக வெல்வதற்கான எல்லா மோசடிகளையும் செய்து வருகிறார்கள்.

 ஏற்கனவே நமக்கு EVM மேல் சந்தேகம் இருக்கிறது, அந்த சந்தேகம் நீங்குவதற்கு முன்பாக எல்லா வகையான ஏமாற்று வேலைகளையும் பாஜக ஆளும் மத்திய அரசு செய்து வருகின்றது.

 இதை கடுமையாக கண்டிக்கிறோம், தேர்தல் ஆணையம் என்பது இப்படியான மோசடி செய்வதற்கு பழக்கப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் உள்ள அல்லது ஒவ்வொரு மாநிலங்களில் தேர்தல் ஆணையங்கள் அந்தந்த மாநில உரிமைகள் மட்டுமே இருக்க வேண்டும், இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் தேர்தலை நடத்தக் கூடாது என்ற முழக்கத்தை இணைப்பாக வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0