அரியலூர் சிலிண்டர் லாரி விபத்து; மீட்பு பணிகளை துரிதப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்
அரியலூர் சிலிண்டர் லாரி விபத்து; மீட்பு பணிகளை துரிதப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்
திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் இன்டோன் கேஸ் சிலிண்டரை திருச்சி குடோனில் இருந்து அரியலூரில் உள்ள டீலருக்கு லாரி முழுவதும் முழுவதும் நிரப்பப்பட்ட கேஸ் சிலிண்டர்களை திருச்சியில் இருந்து அரியலூருக்கு ஏற்றி வந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமம் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வளைவில் திரும்பும் பொழுது நாய் ஒன்று குறுக்கே வந்ததாக சொல்லப்படுகிறது. இதில் கனகராஜ் சட்டென லாரி பிரேக்கை அழுத்தியுள்ளார். லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது. இதனால் பல கிலோமீட்டர் இருக்கு பெரும் அதிர்வுகள் ஏற்பட்டது.
பின்னர், தஞ்சை அரியலூர் வழித்தடத்தில் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஓரளவு தீ ஜுவாலை அடங்கிய பின்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ரசாயன பவுடர் மற்றும் தண்ணீர் கொண்டு அந்தப் பகுதியை குளுமைப்படுத்தினர்.
இந்த நிலையில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறிய இடத்தை குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ் எஸ் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
பின்னர் இந்தியன் ஆயில் நிறுவன ஊழியர்கள், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருடன் ஆலோசனை செய்த அமைச்சர் வெடிக்காத சிலிண்டர்களை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார்.
சம்பவ இடத்தில் அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0