வாலிபர் கொலை; உடலை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

Nov 11, 2025 - 13:04
 0  91
வாலிபர் கொலை; உடலை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

வாலிபர் கொலை; உடலை வாங்க மறுத்து பல்வேறு அமைப்பினர் காத்திருப்பு போராட்டம்

திருச்சி பீமநகரை சேர்ந்த பட்டியலின இளைஞர் தாமரை செல்வன் படுகொலையை கண்டித்தும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையும், அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென உடலை வாங்க மறுத்து, உறவினர்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச் செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ராஜர, லெனின், கார்த்திகேயன், சந்தானம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், மாநில செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் ரேணுகா, மாவட்டத் தலைவர் கனல் கண்ணன், மாவட்ட பொருளாளர் ஜோன்ஸ் உள்ளிட்ட, புதிய தமிழகம், வீர தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே காத்திருக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 

முன்னதாக, நேற்று காலை பீமநகர் காவலர் குடியிருப்பு பகுதியில் தஞ்சம் அடைந்த பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவர் தொழில் போட்டி காரணமாக பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0