திருச்சியில் முதல்வர்; பட்டப்பகலில் வாலிபர் வெட்டி படுகொலை
திருச்சியில் முதல்வர்; பட்டப் பகலில் வாலிபர் படுகொலை
திருச்சி பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் சாலை ஓரம் சென்றவரை கொலை செய்ய விரட்டிய கும்பலுக்கு பயந்து காவலர் குடியிருப்பில் பாதுகாப்புக்காக நுழைந்த போதும் விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், திருச்சி மாநகரில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
போலிசாரின் முதற்கட்ட விசாரணையில், படுகொலை செய்யப்பட்டவர் தாமரைச்செல்வன் வயது 24 என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பதும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..
உயிர் தப்பிக்க அருகே உள்ள புதிய காவலர் குடியிருப்பில் உள்ளே நுழைந்த நபரை ஐந்து பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்ற ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
8
Wow
0