இளையான்குடி அருகே இளமனூரில் சமூக மோதல் – இரண்டு காவலர்கள் உட்பட 5 பேர் காயம்; சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
இளையான்குடி அருகே இளமனூரில் சமூக மோதல் – இரண்டு காவலர்கள் உட்பட 5 பேர் காயம்; சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இளமனூர் கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றம் நிலவுகிறது.
போலீசார் தகவல்படி, இளமனூர் பேருந்து நிலையம் அருகே ஒரு சமூகத்தினர் முன்னதாக சமுதாய அடையாள பலகை ஒன்றை நிறுவியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு சமூகத்தினர் இன்று காலை தங்களது சமூக அடையாள பலகையையும் அப்பகுதியில் நிறுவினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முந்தைய சமூகத்தினர் புதிய பலகையை அகற்றுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நிலைமை மோசமடைந்து அடிதடி சம்பவமாக மாறியது.
இந்த மோதலில் புதிய பலகை நிறுவிய சமூகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். மேலும் மோதலை தடுக்கச் சென்ற இரண்டு காவல்துறையினருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தோர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலையை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி. சிவப்பிரசாத் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இளமனூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காயமடைந்தோரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பரமக்குடி–ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் இளமனூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, மாவட்ட எஸ்.பி. சிவப்பிரசாத் சாலை மறியல் ஆக்கிரமிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0