திருச்சியில் தடம் புரண்டு ரயில் விபத்து? ஓத்திகையால் பரபரப்பு..,,

Oct 24, 2025 - 18:22
Oct 24, 2025 - 18:24
 0  101
திருச்சியில் தடம் புரண்டு ரயில் விபத்து? ஓத்திகையால் பரபரப்பு..,,

திருச்சியில் தடம் புரண்டு ரயில் விபத்து? ஒத்திகை நிகழ்ச்சிகளால் பரபரப்பு

திருச்சி ரயில்வே குட்செட் யார்டு பகுதியில் ரயில் விபத்து நடைபெறும்போது ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடா்கால மீட்பு நடவடிக்கை பயிற்சி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு மிங்கும் சைரன் சத்தத்துடன் ஆம்புலன்ஸ் விரைந்து சென்றதால் சம்பவம் என்னவென்று தெரியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகினர். இது குறித்த விபரம் வருமாறு; 

ரயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை இன்று ஒத்திகை செய்யப்பட்டன. திருச்சி குட்செட் மேம்பால பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு ரயில் தடம் புரண்டு ரயில்பெட்டிகள் ஒன்றன் மேல் ஒன்று மோதி கவிழ்ந்து கிடப்பது போன்று எச்சரிக்கப்பட்டு ரயில் பெட்டிகள் இருந்தன.

கவிழ்ந்து கிடந்த ரயில் பெட்டியில் இருந்து தீ மளமளவென என பரவுவது போன்றும் சித்தரிக்கப்பட்டது.

அப்பகுதியினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்க, ரயில்வே பாதுகாப்புபடை, தேசிய பேரிடா் மீட்புபடை, தீயணைப்புத் துறையினர், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட தனியார் ஆம்புலன்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து ரயில் பெட்டியில் இருந்து தீ வரும் பகுதியில் தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்கின்றனர். மருத்துவ குழுவினர் இடுபாடுகள் சிக்கியவர்களை போல் சித்தரிக்கப்பட்டவர்களை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றுகின்றனர்.

பின்னர் பேரிடர் மீட்பு குழுவினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து ரயில் பெட்டியில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்வது, மேலும் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்று ஒத்திகை நிகழ்ச்சி மற்றும் பயிற்சியில் ஈடுபட்டனர். 

அதேபோல் ரயில்வே துறையில் இருந்து விரைந்து அழைத்துவரப்பட்ட ரயில்வே பணியாளர்கள் தடம் புரண்ட பெட்டிகளை நேர்த்தியாக இடம் மாற்றுவது, கடுமையாக சேதம் அடைந்த பகுதிகளை வெட்டி எடுப்பது, தண்டவாளங்களை சரி செய்வது, மின்சார கேபிள்களை மாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர். ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்வது போன்று தத்ரூபமாக நடித்தனர்.

ஒட்டு மொத்தத்தில் அந்த இடமே ஒரு ரயில் விபத்துக்கான முழு அடையாளமாகவே காணப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் அவ்வழியே சென்றவர்கள், அதிர்ச்சியுடன், அச்சத்துடன் தத்தம் கடமைக்கு உதவிக்கும், அலைபேசியில் தமது நெருங்கியவர்களுக்கும் தகவல் பகிர்ந்தனர். இதனால் அந்தப் பகுதியே உண்மையில் விபத்து நேர்ந்ததற்கான நேர்த்தியான பகுதியாக மாறியது. பின்னர், பொதுமக்களிடம் அதிகாரிகள் இது ஒத்திகை தான் என தெரிவித்த பிறகு அப்பகுதியினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியால் திருச்சி மாநகரில் பெரும் பரபரப்பு நிலவியது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0