ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டு லட்சம் லஞ்சம் வாங்கிய கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கைது
திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் உறவினருக்கு சொந்தமான சுமார் 11 ஆயிரம் சதுர அடி இடம் திருச்சி கே. சாத்தனூரில் பகுதியில் உள்ளது. அந்த இடம் தொடர்பான பட்டாவில் அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என ஆவணங்களில் மாறி இருந்தது. இது தொடர்பாக அது தனக்கான இடம் அதற்கான ஆவணங்களை வைத்துள்ளேன் என திருச்சி ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை நாடி உள்ளார் கிருஷ்ணகுமார்.
அந்த இடத்தை உங்களுடைய பெயருக்கு அதாவது கணிப்பொறி எஸ்.எல்.ஆர்.இ ஏற்றி தர லஞ்சம் வேண்டுமென வருவாய் கோட்டாட்சியரின் உதவியாளர் வட்டாட்சியர் அண்ணாதுரை கேட்டு உள்ளார். எவ்வளவு லஞ்சம் என கேட்ட பொழுது 2 லட்ச ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கராராக சொல்லி உள்ளார்.
இதனை அடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணகுமார் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று புகார் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகுமார் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் பொறி வைப்பு நடவடிக்கையில் இரண்டு லட்ச ரூபாயை இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அண்ணாதுரை இடம் கொடுக்கும் பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் போலீசார் அண்ணாதுரையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் துவாக்குடிமலையில் உள்ள வட்டாட்சியர் அண்ணாதுரை இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு நடத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0