நடப்பாண்டில் ஏழாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
நடப்பாண்டில் ஏழாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனிடையே, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டில் மட்டும் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி 7வது முறையாக எட்டியுள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,374 கன அடியிலிருந்து வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 7,700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0