மழையால் வீடு சேதம்; வீட்டை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
மழையால் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு நிவாரணம் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் திருவெறும்பூர் அருகே ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்து நிவாரணத் தொகை வழங்கி ஆறுதல் கூறினார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இது குறித்த விபரம் வருமாறு;
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சி, மேலமுருக்கூர் கிராமத்தை சேர்ந்த மருதமுத்துவின் மகன் சுடர்(52) என்பவரது ஓட்டு வீடானது கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், வீட்டின் மேற்கூரையானது இடிந்து விழுந்தது.
இத்தகவலை அறிந்த திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிகல்விததுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறியதுடன், தன்னோடு வந்த அரசு அதிகாரிகளை அழைத்து உடனடியாக அவர்களுக்குரிய அடுத்த கட்ட பணிகளை விரைவாக செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார் மற்றும் அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினார்.
இந்த நிகழ்வில் திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் பிரபு உடன் இருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0