கடலூர்; மின்னல் தாக்கி 5 பெண்கள் பலி
கடலூர்; மின்னல் தாக்கி 5 பெண்கள் பலி
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையின் போது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலத்தில் களை எடுத்து கொண்டு இருந்தபோது, இன்று மாலை திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், மின்னல் தாக்கி வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த 4 பெண்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா ஆகிய நால்வரும் உயிரிழந்த நிலையில் தவமணி என்பவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் தற்போது உயிரிழந்தார்.
ஒரே கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட விருந்த நிலையில் அந்த கிராமத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0