காங்கிரஸ் சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

Oct 9, 2025 - 18:29
 0  17
காங்கிரஸ் சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

காங்கிரஸ் சார்பில் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

திருச்சி மாநகர் மாவட்டம் - காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாக்கு திருட்டுக்கு எதிராக பொது மக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான எல்.ரெக்ஸ் தலைமையில், காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய்  முன்னிலையில் நடைபெற்றது

கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியின் போது மத்திய பாஜக மோடி அரசு தேர்தல் ஆணையத்தின் துணையோடு இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட வாக்குத்திருட்டை , ஆதாரங்களோடு வெளிப்படுத்திய, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியினுடைய தெளிவான பட்டியலை பொதுமக்களிடம் விளக்கினர் .

இந்த நிகழ்வில் அரியமங்கலம் கோட்டத் தலைவர் அழகர் , மாவட்ட செயலாளர் ஷேக் தாவுத், விவசாய அணி அண்ணாதுரை, இலக்கிய பிரிவு மாநில செயளாலர் சிவ வைத்தியநாதன், இந்திராதோழி மாரீஸ்வரி, வார்டு தலைவர்கள் நடராஜன், பூபாலன், பெரியசாமி, செபாஸ்தியார், மதி, அமைப்புசாரா திருவரம்பூர் ஒருங்கினைப்பாளர் சம்பத், குருமூர்த்தி, கூத்தைப்பார் சம்பத், எஸ்சி பிரிவு மணி, ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், கோட்ட நிர்வாகிகள் செல்வராசு, ராமர், சையது இப்ராஹிம், மூர்த்தி விஜய், புனிதா, கேப்டன்மேரி, சங்கரன் வார்டு நிர்வாகிகள் வித்தியாதரன்,அப்துல் ரஹ்மான், கண்டோன்மெண்ட் வளன் ரோஸ் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0