திருச்சியில் திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

Oct 8, 2025 - 14:36
 0  46
திருச்சியில் திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

திருச்சியில் திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஆலோசனை

  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ப்பதற்காக திருச்சி வந்தார்.
   திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞரணியின் நிர்வாக பொறுப்புக்கள் தொடர்பான  சான்றிதழ்களை வழங்கி, திமுக வளர்ச்சிக்கு இளைஞரணியினரின் பங்களிப்பு குறித்து பேசினார். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்த பின்னர் திண்டுக்கல் புறப்பட்டு சென்றார்.


   முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


   இந்த நிகழ்வில் மாநகர மேயர் மு.அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, பெரம்பலூர் எம்.பி.அருண்நேரு, வைரமணி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0