ம.க.ஸ்டாலின் திறந்த கழிப்பறையின் லட்சணம் வெட்ட வெளியில்; சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு
ம.க.ஸ்டாலின் திறந்த கழிப்பறையின் லட்சணம் வெட்ட வெளியில்; சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்நிலையில் பள்ளி மேம்பாட்டு நிதியில், பள்ளி வளாகத்தில் ரூ.34 லட்சம் மதிப்பில் இரு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை நேற்று ஆடுதுறை பேரூராட்சி பா.ம.க சேர்மன் ம.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அரசுப்பள்ளி கழிப்பறை திறந்து வைத்த பிறகு உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது ஒவ்வொரு கழிப்பறைக்கும் இடையே தடுப்பு சுவர்கள் இல்லாமல் இருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி பலரும் கழிப்பறை போட்டோவை பதிவிட்டு கமெண்ட் செய்தனர். இந்த விவகாரம் ஆடுதுறை பகுதியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
"அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் பயன்பாட்டிற்காக சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை சேர்மன் ம.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அந்த புதிய கழிப்பறையில் ஒரு இடத்தில் கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட சிறுநீர் கழிப்பதற்கான பீங்கான் பேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் ஒவ்வொரு பேஷனுக்கும் இடையே தடுப்பு சுவரோ அல்லது தடுப்புகளோ அமைக்கப் படவில்லை.
அரசுப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கிட்டத்தட்ட திறந்தவெளி கழிப்பறை அமைப்பில் அந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. போதுமான பைப் அமைத்து தண்ணீர் வசதியும் ஏற்படுத்தவில்லை. மாணவிகள் பயன்படுத்தப் போகிறார்கள், இது எப்படி வெளியே தெரியப்போகிறது என நினைத்தார்கள் போல.
கட்டுமானப் பணிகள் நடக்கும்போதும், முடிந்த பிறகும் பள்ளியின் தலைமை ஆசிரியர் யாரும் உள்ளே சென்று பார்க்கவில்லையா? ஒருவேளை பார்த்திருந்தால் அவர்கள் இதில் அலட்சியமாக இருந்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது.
இந்தப் பணியைச் செய்த ஒப்பந்ததாரர் யார், ஏன் இப்படிச் செய்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இது சர்ச்சையான பிறகு பணி முடிவதற்குள் திறந்துவிட்டதால் தடுப்பு அமைக்கும் பணி இனி நடக்கும் என்பதுபோல் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் சொல்வதுபோல் தெரிகிறது. ஆனால் ஒவ்வொரு கழிப்பறை பேசினுக்கும் இடையே தடுப்புச் சுவர் அமைப்பதற்கான இடம் இல்லை" என்றனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0