பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி மறைவு; பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்
பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி மறைவு; பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகப் பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயார் இன்று காலை காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தத்தம் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் துக்கமும் துயரமும் அடைந்தேன்.
பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.
மேற்க்கண்டவாறு இரங்கல் செய் தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0