துரை வைகோ எம்.பி. நிதியில் ரூ.1,18,40,000 மதிப்பீட்டில் பொதுநலத்திட்டங்கள் துவக்கி வைப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
துரை வைகோ எம்.பி. நிதியில் ரூ.1,18,40,000 மதிப்பீட்டில் பொதுநலத்திட்டங்கள் துவக்கி வைப்பு; அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் துரை.வைகோ. இவர் எம்.பி.யானது முதல் பொதுமக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றார். இதுமட்டுமல்லாமல், தனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிகளில், தனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 1,18,40,000 மதிப்பீட்டில் பல்வேறு பொதுநலத் திட்டங்கள் செயல்படுத்தியுள்ளார். அதன்படி அந்த நிதியில் கட்டப்பட்ட பல்வேறு பொதுநலத் திட்டங்களின் திறப்பு விழாவில் தொகுதி அமைச்சரையும் அழைத்து பங்கேற்று பெருமிதம் கொண்டார்.
அந்தவகையில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், மொத்தம் 6 திட்டங்கள் திறக்கப்பட்டன. மூன்று நியாய விலைக் கடைகள், இரண்டு குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையம் ஆகும். இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூபாய் 75 இலட்சம். மன்னார்புரம், சுப்பிரமணியபுரம், காஜாபேட்டை, வரகநேரி முஸ்லிம் தெரு, அண்ணாநகர், கருவாட்டுப்பேட்டை, கே.கே.நகர் பர்மா காலனி ஆகிய பகுதிகளில் இத்திட்டங்கள் திறந்து வைக்கப்பட்டன.
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில், மொத்தம் 4 திட்டங்கள் திறக்கப்பட்டன. ஒரு நியாய விலைக் கடை, ஒரு பயணியர் நிழல் கூடை, ஒரு சீரணி அரங்கம் மற்றும் இரு உயர் கோபுர மின்விளக்குகள் ஆகும். இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூபாய் 43.4 இலட்சம் ஆகும். நவல்பட்டு ஊராட்சி போலீஸ் காலனி, துவாக்குடி நகராட்சி ராவுத்தான் மேடு, பெல் நகர் இணைப்பு சாலை தெற்கு பகுதி, அரசு கலைக் கல்லூரி அருகில், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை உழவர் சந்தை அருகில் இவைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ்.இருதயராஜ், திமுக மாநகரக் கழகச் செயலாளரும், மண்டலக் குழு தலைவருமான மு.மதிவாணன், திட்ட இயக்குனர் கங்காதரணி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி சேரன், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0