விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது, கூட்ட நெரிசல் காரணமாக மயக்கம் அடைந்து, 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வேடிக்க, இது தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் நடைபெற்றது.
நாமக்கல் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கரூரில் பரப்புரைக்காக விஜய் தனது பிரச்சார வாகனத்தில் சென்றபோது, கரூர் மாவட்ட எல்லையான தளவாபாளையம் பகுதியில் விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இளைஞர்களால் கரூர் தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி அருகே, அஜாக்கிரதையாக இருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று விஜய் பிரச்சார வாகனத்தின் பக்கவாட்டில் இடிபட்டு கீழே விழுந்தனர். லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.
எனவே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விஜய்யின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியது.
இதையடுத்து கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விஜய் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் வாகனம் மீதும், இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் சென்ற இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0