திருச்சியில் ஒரே நேரத்தில் 69 கடைகளுக்கு பூட்டு போட்ட மாநகராட்சி; வியாபாரிகள் சாலை மறியல்
திருச்சியில் ஒரே நேரத்தில் 69 கடைகளுக்கு பூட்டு போட்ட மாநகராட்சி; வியாபாரிகள் சாலை மறியல்
திருச்சி மேலப்புலிவார்ரோடு மற்றும் மரக்கடை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த 69 கடைகளுக்கு வாடகையை செலுத்தவில்லை எனக்கூறி போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இன்று கடைகளுக்கு சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிமன்ற உத்தரவு எனக்கூறி கடைகளை அகற்றி வந்தாலும் அதற்கான நகல்களை சமர்ப்பிக்காமலும், உரிய கால அவகாசம் வழங்கப்படாமல், போலீசாரை கொண்டு மிரட்டி கடை உரிமையாளர்களை மற்றும் ஊழியர்களை வெளியேற்றி கடைகளை சீல் வைக்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் அராஜகப் போக்கினால் போலீஸாருக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், கடை உரிமையாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவியது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0