தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து நாமக்கல் புறப்பட்டார்

Sep 27, 2025 - 09:50
Sep 27, 2025 - 09:55
 0  55
தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து நாமக்கல் புறப்பட்டார்

தவெக தலைவர் விஜய் திருச்சியில் இருந்து நாமக்கல் புறப்பட்டார்

திருச்சி அரியலூர் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், மூன்றாம் கட்டமாக இன்று நாமக்கல் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

மூன்றாம் கட்ட பிரச்சார பயணத்திற்காக இன்று காலை தனி விமான மூலம் திருச்சி வந்தடைந்தார் விஜய். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு புறப்பட்டார். 

விமான நிலையத்திலிருந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சென்னை பைபாஸ் சாலை நம்பர் ஒன் டோல்கேட் முசிறி தொட்டியம் வழியாக நாமக்கல் பிரச்சார இடத்திற்கு சாலை மார்க்கமாக விஜய் புறப்பட்டார். மூன்று சொகுசு கார்களில் முதல் காரில் முன் இருக்கையில் அமர்ந்து தனது பயணத்தை துவக்கினார் விஜய்.

விஜய் திருச்சி வந்ததை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திருச்சி விமான நிலையம் முன்பு கூடியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். திருச்சி விமான நிலையத்திற்குள் பயணிகள், அலுவல் நிமித்தமாக செல்லக்கூடியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள், விஜய் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் விமான நிலையம் வரும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0