தந்தை பெரியார் பிறந்த நாள்; டீக்கடையில் இரண்டு ரூபாய்க்கு தேனீர் கொடுத்த பெரியார் தொண்டன்

Sep 17, 2025 - 14:06
Sep 18, 2025 - 06:35
 0  36
தந்தை பெரியார் பிறந்த நாள்; டீக்கடையில் இரண்டு ரூபாய்க்கு தேனீர் கொடுத்த பெரியார் தொண்டன்

தந்தை பெரியார் பிறந்த நாள்; டீக்கடையில் இரண்டு ரூபாய்க்கு தேனீர் கொடுத்த பெரியார் தொண்டன்

திருவெறும்பூர் திராவிட கழக நகர செயலாளர் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தனது டீக்கடையில் இரண்டு ரூபாய்க்கு பொதுமக்களுக்கு டீ வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழக முழுவதும் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் நகர செயலாளர் சிவானந்தன் எனபவர் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் நகர் பகுதியில் டீக்கடை வைத்து கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தனது கடையில் டீ குடிக்க வரும் அனைவருக்கும் காலை 4 மணி முதல் இன்று இரவு எட்டு மணி வரை டீ கட்டணம் இரண்டு மட்டுமே பெற்றுக் கொண்டு டீ வழங்குகிறார். பால், சர்க்கரை, டீத்தூள் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்ந்துள்ள காலகட்டத்தில் சிவானந்தன் தந்தை பெரியார் மீது கொண்ட ஈடுபாட்டால் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் இரண்டு ரூபாய்க்கு டீ வழங்குகிறார்.

 

இரண்டு ரூபாய்க்கு டீ கிடைக்கும் அந்த கடைக்கு இன்று மானசீக அன்பர்கள் திரளாகச் சென்று டீ அருந்தினர். நாள் முழுவதும் இரண்டு ரூபாய்க்கு டீ கிடைத்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0