சிவப்பாக மாறிய கூகுள் மேப்; கணிக்க தவறிய காவல்துறையினரால் அல்லோளப்படும் திருச்சி மாநகரம்
சிவப்பாக மாறிய கூகுள் மேப்; கணிக்க தவறிய காவல்துறையினரால் அல்லோளப்படும் திருச்சி மாநகரம்
கட்டுக்கடங்காத கூட்டத்தை எதிர்பார்க்காத காவல்துறை கைவிரித்து நிற்கிறது. ஒரு அரசியல் கட்சித் தலைவரின் பிரச்சார பயணம் என்பதை முன்கூட்டியே கணிக்க தவறிய காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், கூட்டத்தின் கணக்கீடுகளை கணிக்க தவறிவிட்டது. விஜய் பயணிக்கும் சாலைகளில் பெரும்பாலான இடங்களில் கடைகளை தாமாகவே முன்வந்து அடைத்து விட்டதால் லட்சக்கணக்கானோர் கூடிய மரக்கடை பகுதியில் அவசர ஆத்திரத்திற்கு ஒதுங்கவோ தண்ணீர் குடிக்கவோ வழி இல்லாமல் தொண்டர்கள் திணறி வருகின்றனர். பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தியும் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் திருச்சி மாநகரமே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
1
Sad
0
Wow
0