தாராபுரத்தில் அதிமுக முன்னிலை மதுராந்தகத்தில் தவெக முன்னிலை,
தாராபுரத்தில் அதிமுக முன்னிலை மதுராந்தகத்தில் தவெக முன்னிலை,
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகி ராமன் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மதுராந்தகம் தொகுதியில் 22 சுற்றுகளாகவும், தாராபுரம் தொகுதியில் 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
முன்னணி நிலவரங்கள் ;
மதுராந்தகத்தில் முதல் சுற்றில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேல் 7398 வாக்குகள், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் 6006 வாக்குகள், அ.தி.முக.வின் கனிதா சம்பத் 4031 வாக்குகள் பெற்றுள்ளனர். இதன் மூலம் த.வெ.க தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தலில்,
அதிமுக பானுமதி 6450 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சத்தியபாமா 6384
திமுக சுகன்யா 4927 பெற்றுள்ளனர்.
கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் வாக்குப் பதிவில், மதுராந்தகத்தில் 86.26 சதவீத வாக்குகளும், தாராபுரத்தில் 80.25 சதவீத வாக்குகளும் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0