தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகி
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகி
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்கட்சி அந்தஸ்தை இழந்ததுடன், மூன்றாம் இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது. இதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியே காரணம் என கூறி அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அவருக்கு எதிராக போர் கொடி தூக்கினர். மேலும், அக்கட்சி இரண்டாக உடைந்தது. அதிமுக முக்கிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட மூத்த நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அந்த வகையில், அதிமுக முன்னாள் மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞருமான ஆர். ராஜ்குமார் இன்று தமிழக வெற்றிக்கழக துணை பொதுசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
இந்த நிகழ்வில் ஜோதிவாணன், வெல்லமண்டி என். ஜவஹர்லால் நேரு, பத்மநாதன், புத்தூர் ராஜேந்திரன், தென்னூர் அப்பாஸ், வரகனேரி சரவணன், எடத்தெரு சந்திரன், கீழக்கரை முஸ்தபா, சிராஜிதீன், பால்ராஜ் தீரன் மாநகர் தனபால் ஆகியோர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0