மின் கணக்கீடு செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்; மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

Sep 29, 2026 - 17:43
 0  3
மின் கணக்கீடு செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்; மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

மின் கணக்கீடு செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்; மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு ஆர்ப்பாட்டம்

மின் கணக்கீடு செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் இன்று நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்த விபரம் வருமாறு ;

​மின் கணக்கீடு செய்யும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பிக்ஸ்டு டேர்ம் எம்ப்ளாய்மெண்ட் எனும் ஒப்பந்த முறையைப் புகுத்தி மின்வாரியத்தைத் தனியார் மயமாக்குவதைத் திரும்பப் பெற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ற பெயரில் மின் பகிர்மானத்தை முழுமையாகத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

​இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், வட்ட செயலாளர் பழனியாண்டி, வட்டத் துணைத்தலைவர் எஸ்.கே.செல்வராஜ், டி.என்.பி.இ.ஓ மாநில துணை செயலாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர்.

​இதில் சங்க நிர்வாகிகள் உட்பட மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக நகரக்கோட்ட தலைவர் சார்லஸ் நன்றி கூறினார்.

இதேபோல் துறையூர், முசிறி, மணப்பாறையிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

​

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0