திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம்; குப கிருஷ்ணன் பங்கேற்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம்; குப கிருஷ்ணன் பங்கேற்பு
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் விழா திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீக் தாயள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் குப கிருஷ்ணன் கலந்துகொண்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரத்தை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் பொன்மணி, முன்னாள் அமைச்சர் சிவபதி, மருத்துவமனை டீன் குமாரவேல், கண்காணிப்பாளர் அருண்ராஜ், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் குப.கி.சிரஞ்சீவி, என்.எஸ்.பூபதி, நவல்பட்டு விஜி, ரஜினிகாந்த், கேகே நகர் சுரேந்திரன், மலைக்கோட்டை வினோத், உஸ்மான் பாபு, புத்தூர் ராஜேந்திரன், திருவரங்கம் மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் ஹேமா முல்லை ராஜன், தொழிலதிபர் லயன் கரிகாலன், வழக்கறிஞர்கள் ஜான் ரஸ்கின், முல்லை சுரேஷ், வரகனேரி சசிகுமார், வடிவேல் சாமி, நிர்வாகிகள் தென்னூர் சேட்டு, ஷாஜகான், நிர்மலா, வரகனேரி அரசு, திருவரங்கம் மதனா, பிரியா சிவக்குமார், வழக்கறிஞர்கள் ஆர். ஏ. அஸ்வி ராஜா, பொன் முருகன், சுரேஷ் பி. சி.இந்திரா,பட்டு செல்வராஜ், மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் குப கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தாயுமானவர் மண்ணில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்துள்ளார். அந்த வழியிலே திருச்சியில் உள்ள மக்களுக்கு தங்க மோதிரம் வழங்கும் வாய்ப்பு எங்கள் எல்லோருக்கும் கிடைத்தது. நாங்கள் இதை பெருமையாக கருதுகிறோம் என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0