விஜய் நாளை திருச்சியில் பிரச்சாரம்; புஸ்லி ஆனந்த் கோவிலில் வழிபாடு

Sep 12, 2025 - 12:27
Sep 12, 2025 - 13:01
 0  16
விஜய் நாளை திருச்சியில் பிரச்சாரம்; புஸ்லி ஆனந்த் கோவிலில் வழிபாடு

விஜய் நாளை திருச்சியில் பிரச்சாரம்; புஸ்லி ஆனந்த் கோவிலில் வழிபாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரம் மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார

 அதன்படி வருகிற 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை அவர் மக்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை 13 ஆம் தேதி அவர் பிரச்சாரப்பயணம் மேற்கொள்கிறார். திருச்சி மரக்கடை பகுதியில் தனது முதல் பிரச்சாரத்தை விஜய் மேற்கொள்கிறார். இதற்காக திருச்சி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் இன்று திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அருள்மிகு ஸ்ரீ வழிவிடு முனீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடமான திருச்சி மரக்கடை பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தவெக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பெரம்பலூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள 21 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. நிபந்தனைகளை மீறினால் பிரசாரத்தை இடையிலேயே நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, பெரம்பலூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வேண்டுகோள் விடுத்த காமராஜர் வளைவுப் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காமராஜர் வளைவுப் பகுதிக்கு பதில் மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 பிரச்சாரத்தின்போது ஒலி அளவானது பொதுமக்களுக்கு இடையூறு தராத வகையில் இருக்க வேண்டும், பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள காவல்துறை, உரிய அனுமதியின்றி பேனர்கள், அலங்கார வளைவுகள், கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதித்துள்ளது. முன்னதாக தவெக நிர்வாகி குடமுருட்டி கரிகாலன் ஆட்டோ பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார். . க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0