திருச்சிக்கு விமானம் மூலம் உள்ளாடையில் தங்கம் கடத்திய 2 பேர் கைது ; ரூ.1.31 கோடி தங்கம் பறிமுதல்

Sep 25, 2026 - 10:29
 0  49
திருச்சிக்கு விமானம் மூலம் உள்ளாடையில் தங்கம் கடத்திய 2 பேர் கைது ; ரூ.1.31 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சிக்கு விமானம் மூலம் உள்ளாடையில் தங்கம் கடத்திய 2 பேர் கைது ; ரூ.1.31 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினா் துருவித் துருவி சோதனை செய்தனா்.

அப்போது, இரு பயணிகளின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தனியாக அழைத்து சென்று நடத்திய சோதனையில் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து 591.5 கிராம் (74 பவுன்) தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.90.33 லட்சமாகும். இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஒரு பயணி தனது சட்டையில் தங்க பட்டன் வைத்து அதை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்து 25.5 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.41 லட்சமாகும். ஒரே நாளில் மொத்தம் ரூ.1.31 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது .

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0