எல்நினோ பாதிப்பு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துக: முதல்வருக்குபிஆர் பாண்டியன் வேண்டுகோள்
எல்நினோ பாதிப்பு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துக: முதல்வருக்குபிஆர் பாண்டியன் வேண்டுகோள்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேக்கேதாட்டு அணையை தடுத்திடவும், ராசி மணல் அணை கட்ட ஒத்த கருத்து உருவாக்கவும் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி பொதுச் செயலாளர் பிஆர் பாண்டியன் தலைமையில் துவங்கிய பிரச்சார பயணம் இன்று திருவாரூரில் நிறைவு பெற்றது. பிரச்சார பயணத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் பிஆர் பாண்டியன் தெரிவித்ததாவது;
கர்நாடக அரசு மத்திய அரசின் வனத்துறை சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமலும்,தமிழகம் புதுச்சேரி ஒப்புதல் வராமலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறாமல் விரிவான மேக்கேதாட்டு வரைவு திட்ட அறிக்கை என்கிற பெயரில் போலியான அறிவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது இதனை மத்திய அரசு நிராகரிக்க முன் வர வேண்டும்.
கர்நாடக தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு அடிப்படையில் திமுக அரசு கொடுத்த ஒப்புதல் கடிதத்தின் அடிப்படையிலும் ராசிமணல் அணை கட்ட திட்டமிடுவதற்கு தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்.
எல்நினோ தாக்குதல் குறித்து தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை குழு அமைத்த ஆய்வு குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் மிகப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரையும் கண்டிராத மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரித்துள்ளது. மேலும் வீடுகளில் குடியிருப்பது கூட மிகப் பெரிய வெப்பத்தாக்குதல் ஏற்படுகின்ற அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது தமிழக முழுமையிலும் வறட்சி கொடுமை ஏற்பட்டுள்ளது.
எனவே, ராசிமணல் அணை கட்டுமானத்திற்கு ஒத்த கருத்தை உருவாக்குவதற்கும்,எல் நினோ தாக்குதல் குறித்து விவாதிப்பதற்கு அனைத்து கட்சி மற்றும் விவசாயிகள் வணிகர்கள் கொண்ட கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறோம் என்றார்.
பிரச்சாரப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட தலைவர் எம் ல்.சுப்பையன் தலைமை ஏற்றார். உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகிகள் அயனாவரம் சி.முருகேசன், துரை குபேந்திரன் கல்வியாளர் தியாகபாரி, மாவட்டத் துணைத் தலைவர் கோவிந்தராஜ், துணை செயலாளர் முகேஷ், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகஸ்டின், தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0