அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு ; தொண்டர்கள் குவிவதால் போலீசார் குவிப்பு 

Sep 16, 2026 - 09:42
Sep 16, 2026 - 20:29
 0  88
அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு ; தொண்டர்கள் குவிவதால் போலீசார் குவிப்பு 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு ; தொண்டர்கள் குவிவதால் போலீசார் குவிப்பு 

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட 6 இடங்களில் இன்று காலை முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டுக்கு இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வருகை தந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இந்த சூழலில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியிருந்தார். அவர் பொறுப்பு வகித்த பள்ளிக்கல்வித்துறையில் ஊழல் நடந்துள்ளதாக திமுக நிர்வாகி பி.டி.அரசகுமார் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், டி.டி.சி.பி. மற்​றும் சி.எம்.​டி.ஏ. அங்​கீ​காரம் உள்​ளிட்ட பிற சட்​டப்​பூர்வ அனு​ம​தி​களை பெற்​றுத் ​தரு​வ​தாக கூறி, தமிழகம் முழு​வதும் பல தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் இருந்து ரூ.100 கோடிக்கும்மேல் வசூலித்து மோசடி செய்​துள்​ள​தாக அளிக்கப்​பட்ட புகாரின் பேரில், திமுக நிர்வாகி பி.டி அரசகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுவரை 117 புகார்கள் இந்த வழக்கில் பெறப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பிடி அரசகுமார் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இந்த மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதன் அடிப்படையில் பி.டி. அரசகுமார் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில் ரூ.100 கோடி மோசடி வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது வீடு முன்பு முன்னாள் அமைச்சர் கே என் நேரு உள்பட திமுகவினர் குவிந்து வருகின்றனர்.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் வழக்கு பதிவு செய்ததின் அடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய வாளாடி கார்த்திக் வீடு உள்பட ஆறு இடங்களில் இன்று காலை முதல் அதிரடி ரெய்டு நடப்பது குறிப்பிடத்தக்கது..

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0