மன்னார்குடியில் தனியார் மருத்துவக்கல்லூரி; பெண் பேராசிரியர் முயற்சிக்கு அனுமதி?

Aug 10, 2026 - 14:57
 0  36
மன்னார்குடியில் தனியார் மருத்துவக்கல்லூரி; பெண் பேராசிரியர் முயற்சிக்கு அனுமதி?

மன்னார்குடியில் தனியார் மருத்துவக்கல்லூரி; பெண் பேராசிரியர்க்கு அனுமதி?

டெல்டாவில் தனியார் மருத்துவக்கல்லூரிகளே இல்லாத நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் பெண் பேராசிரியர் ஒருவருக்கு அனுமதி கிடைக்க இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்தியாவில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் புதிய அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் கூடுதலாக திறக்க தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி 2026-27 கல்வி ஆண்டிற்கான புதிய இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் 18 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 7 அரசு மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 25 கல்லூரிகளள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

இதன் மூலம் நாடு முழுவதும் கூடுதலாக 2,400 எம்.பி.பி.எஸ் இடங்கள் கிடைக்கும். அதில் 2000 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் கிடைக்கும் என்கிறார்கள். இதன் மூலம் மருத்துவ வசதிகளும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 5 தனியார் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன. 

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. திருச்சி முதல் நாகை வரை தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. 

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் முடிவின் படி 2026-27ம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் புதிதாக வர உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றை டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தொடங்குவதற்கு அனுமதி அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பெண் பேராசிரியரான ராதிகா மணிமாறன் R.R.Memorial Educational and Charitable Trust Mannargudi என்ற அறக்கட்டளை பெயரில் ரிஷியூரில் உள்ள 60 ஏக்கர் நிலத்தில் தனியார் மருத்துவக்கல்லூரியை தொடங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். இவரது கணவர் மணிமாறன் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக லண்டனில் வசித்து வந்தவர். ஐந்து தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல நூறு நபர்களின் பங்களிப்பில் பேராசிரியர் ராதிகா மணிமாறன், தனியார் மருத்துவக்கல்லூரியை தொடங்குவதற்கான அனுமதியை பெறுவதற்கு மத்திய அரசிடம் அதற்குரிய ஆவணங்களிடன் விண்ணப்பித்துள்ளார். இவருக்கே அனுமதி கிடைப்பதற்கான நிலை இருப்பதாக சொல்கிறார்கள்.

அதே நேரத்தில், மன்னார்குடியில் இரண்டு அரசியல் பெரும்புள்ளிகளும் தனியார் மருத்துவக்கல்லூரியை தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். இதில் அரசியல் குறுக்கீடுகளை தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் விரும்பவில்லை என்கிறார்கள். எனவே, தொண்டு நிறுவனத்தின் மூலம் தொடங்குவதற்கு விண்ணப்பித்துள்ள ராதிகா மணிமாறனுக்கு அனுமதி கிடைத்து விடும் என்கிறார்கள். சமூக சேவையில் கவனம் செலுத்துக்கூடியவர் ராதிகா மணிமாறன். தன் கணவர் மணிமாறனுக்கு சிறுநீரகம் பாதித்த நிலையில் தன் சிறுநீரகத்தை கொடுத்தவர்.

மன்னார்குடியில் தனியார் மருத்துவக்கல்லூரி அமையும் பட்சத்தில், அப்பகுதியைச் சுற்றியுள்ளவர்கள் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்காது. உயர்தர மருத்துவ வசதிகள் உள்ளூரிலேயே கிடைக்கும். விபத்து மற்றும் அவசர காலங்களில் பல்துறை சிறப்பு மருத்துவர்கள் சிறிய நகரங்களுக்கும் வருவார்கள். வேலை வாய்ப்புகள் கிடைக்கும். டெல்டாவைச் சேர்ந்த டாக்டருக்கு படிக்க கூடிய பல மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் வெளி மாவட்டங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கின்றனர். மன்னார்குடியில் தனியார் கல்லூரி அமைந்து விட்டால் உள்ளூரிலேயே டாக்டருக்கு படிக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0