உள்ளே பட்ஜெட் விவாதம்; வெளியே விவசாயிகள் போராட்டம்; 40 பேரை கைது செய்தது தவெக அரசு
உள்ளே பட்ஜெட் விவாதம்; வெளியே விவசாயிகள் போராட்டம்; 40 பேரை கைது செய்தது தவெக அரசு
சென்னை தலைமைச்செயலகம் முன்பு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற தவெக வாக்குறுதி என்ன ஆனது என்று விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். முழுமையான விவசாய கடன் தள்ளுபடியை உடனே அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கத்தி படத்துல விவசாயத்தை பத்தி நிறையா பேசுனாரு.. ஆனா முதலமைச்சராக எங்களுக்கு இதுவுமே செய்யல" என்றும் தெரிவித்தனர். சட்டப்பேரவைக்கு உள்ளே விவசாயிகள் பிரச்சனை செய்தி குறித்து விவாதம் நடந்துவரும் நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே தவெக அரசைக் கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் உள்பட 40க்கும் மேற்பட்ட விவசாயிகளை தவெக அரசு கைது செய்தது என்பதும் மாலை ஒரு தரப்பு விவசாயிகளை வேளாண்மை துறை அதிகாரிகள், அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0