தமிழக அரசு காவிரி விவகாரத்தில் வறட்டு கௌரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - திருச்சியில் திருமாவளவன்
தமிழக அரசு காவிரி விவகாரத்தில் வறட்டு கௌரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - திருச்சியில் திருமாவளவன்
அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது;
தமிழக பட்ஜெட் இன்று துவங்கிய நிலையில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அறிக்கையை ஜெப மாலையுடன் கொண்டு வந்தது குறித்த கேள்விக்கு,
பட்ஜெட் தாக்கலின்போது பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் ஜெபமாலையையும் அதோடு சேர்த்து எடுத்து வந்தது அவரின் தனிப்பட்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அரசமைப்பு சட்டம் அங்கீகரிக்கிறது.
மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அரசமைப்பு சட்டம் தான் மத நம்பிக்கையையும் அங்கீகரிக்கிறது. அரசமைப்பு சட்டத்தில் உள்ள இந்த முரண்பாட்டை பெரியார் விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அம்பேத்கர், பன்மைத்துவத்தை போற்ற இது அவசியம் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
இன்றைய பட்ஜெட்டும் பற்றாக்குறை பட்ஜெட் ஆகத்தான் இருக்கும் என கருதுகிறேன் பட்ஜெட் முழுமையாக வாசித்த பின்பு தான் அது தெரியும் ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு மாதத்தில் அவர்களால் புதிய திட்டங்களை செயல்படுத்தி பற்றாக்குறையை சரி செய்ய முடியாது.
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கர்நாடகாவில் தேவையான அளவு தண்ணீர் உள்ளது. பெங்களூருக்கு தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் எடுத்துக்கொள்ளலாம். அந்த அணை 80 மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் மேகதாது 120 மீட்டர் தொலைவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து கட்டவேண்டிய அரசியல் சூழல் உள்ளது. அது பற்றி பேச வேண்டிய நேரத்தில் இப்படி பட்ட விவாதத்தில் ஈடுபடுவது நல்லது இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை எனக் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு
அது முடிந்துபோன விஷயம். நான் அதுபோல் பேசவில்லை என உதயநிதி கூறியுள்ளார். அதை இனி பேசுவது சரியல்ல.
அந்த பிரச்சினையை உதயநிதி சட்டப்படி எதிர்கொள்வார். அவர் அதை மறுத்துள்ளார். ஆனால் அனைத்து கூட்டங்களிலும் அவர் பேசியது வெளியாகி உள்ளது. அவர் வருத்தம் தெரிவிப்பார் என நான் கூறியிருந்தேன். அரசியல் கட்சியினர் அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்கள் வைக்கும்போது பெண்களை பாதிக்காத வகையில் வைக்க வேண்டும் என்பது என் கருத்து. உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து மக்கள், பெண்கள் அரசியல் சாராத அமைப்பினர் இடையே எழுந்துள்ளது, நெருக்கடியான நேரத்தில் எழுந்துள்ளது, அதனை நானும் ஏற்கிறேன்.
திமுகவுக்கு த.வெ.க வுக்கோ அல்லது முதல்வர் விஜய், உதயநிதிக்கு ஏற்பட்ட பிரச்சனை இல்லை. இதில் பெண் குறித்து சர்ச்சை பேசியது தான் இதில் பிரச்சனை. பெண்களுக்கு எதிராக பேசியதால் வலுவான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதனை நானும் வழிமொழிகிறேன். உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தை தொடர் விவாதத்திற்கு உட்படுத்த தேவையில்லை. அது நேற்றோடு முடிந்துவிட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார் என்ற கேள்விக்கு..,
அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்ற நிலைப்பாடு முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் வைத்தது. இதில் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி கருத்து கேட்க வேண்டும். இதில் எந்த பாகுபாடும் காட்ட கூடாது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற நிலை இருக்கக்கூடாது.
காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது தேவை. பெங்களூருக்கு தேவையான நீரை கிருஷ்ணசாகர் அணையில் இருந்து பெற முடியும் என்கிற போதும் மேகதாது அணையை கட்டியை தீருவோம் என கர்நாடக அரசு தெரிவிக்கிறது, ஒன்றிலிருந்து கர்நாடக மாநில அரசியல்வாதிகளின் அரசியலை அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில் தமிழக அரசு கௌரவம் பார்த்து வறட்டு பிடிவாதம் பிடிக்க தேவையில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும், தமிழர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0