கருத்துரிமைக்கு எதிராக கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு - கிள்ளை ரவிந்திரன்
கருத்துரிமைக்கு எதிராக கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு - கிள்ளை ரவிந்திரன்
தஞ்சையில் நேற்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் விஜய் திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக காவல் துறையில் புகார் பெறப்பட்டு தமிழக எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை சென்னை நீலாங்கரை இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவரது கைக்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதே நேரம் கருத்துரிமைக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுப்பது ஏற்புடையதல்ல என பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் வழக்கறிஞர் கிள்ளை ரவிந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ;
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தஞ்சையில் காவிரி நீர் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் , நடிகை திரிஷா குறித்து தரக்குறைவாக பேசிவிட்டார் என்றுதான், தவெக ரூட் மாபியா பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆதரவு ஊடகங்கள் Cut and Paste செய்கின்றன. அதற்காக பதியப்பட்டுள்ள வழக்குகளில் ஏன் அதற்கான பிரிவுகள் தவிர ,
ஜாமீன் பெற முடியாத கடுமையான பிரிவுகள் (Non-Bailable Offences) போடப்பட்டுள்ளது. ?
நீதிமன்றக் காவலுக்கு (Judicial Custody) அனுப்பப்பட்ட பின், வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துதான் ஜாமீன் பெற முடியும்:
பிரிவு 196 (BNS): வெவ்வேறு குழுக்களிடையே பகையை வளர்த்தல் மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (இது மிகக் கடுமையான ஜாமீனில் வர முடியாத பிரிவு ஆகும்).
பிரிவு 192 (BNS): கலவரத்தை உண்டாக்கும் உள்நோக்கத்துடன் ஆத்திரமூட்டுவது.பிரிவு
61 (BNS): குற்றச் சதி (Criminal Conspiracy) - பிற பிரிவுகளுடன் இணைந்து வரும்போது இதன் தீவிரத்தன்மை மாறும்.
தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் (பிரிவு 4): பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் (சிறப்புச் சட்டத்தின் கீழ் வருவதால் நீதிமன்றத்தின் மூலமே பிணை கோர முடியும்).
தகவல் தொழில்நுட்பச் சட்டம் (பிரிவு 67): மின்னணு ஊடகங்கள் வழியே ஆபாசமான/கண்ணியக் குறைவான உள்ளடக்கங்களைப் பரப்புதல்.
ஆகிய பிரிவுகள் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ளன. நாளை சட்டமன்றத்தில் சந்திக்க முடியாத பயமன்றி வேறென்ன ?
உதயநிதி கைது குறித்து வழக்கறிஞர் கிள்ளைரவிந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0