எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது

Aug 4, 2026 - 10:58
Aug 4, 2026 - 11:28
 0  118
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது 

 முதல்வர் விஜய்யை அவதூறாக பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை நீலாங்கரை இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை தஞ்சை போலீசார் கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் விஜய்யை இழிவாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீசார் இன்று நீலாங்கரை இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

தஞ்சையில் மேகதாது மற்றும் காவிரி பிரச்சனை தொடர்பாக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்; ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம்; ஆனால் இன்னமும் தண்ணீர் வரவில்லை. இன்று வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதைப் பற்றி இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாய் திறந்து பேசுகிறாரா என்றால் இல்லை. அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, தி.மு.க. மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு ”தண்ணீர்” வர வேண்டும் (நான் காவிரியைச் சொன்னேன்)” என பேசியிருந்தார்.

இதையடுத்து முதல்வர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் தவெகவினர் புகார் கொடுத்தனர். மேலும் சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக இன்று காலை முதலே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்ததால் திமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவின் வழக்கறிஞர்களும் போலீசாரால் தடுக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து உதயநிதி வீட்டுக்குள் சென்ற போலீசார், அவரை கைது செய்வதாக தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரின் பேரில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு முன்ஜாமீன் பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வில் அவரது வழக்கறிஞர்கள் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்தனர். இதனை தலைமை நீதிபதி தர்மாதிகாரி ஏற்றுக் கொண்டு பிற்பகலில் விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

 முன்னதாக, நீலாங்கரை இல்லத்தில் உதயநிதியின் மனைவி கிருத்திகாவுடன் பேசிய காவல்துறை இணை ஆணையர் விஜயகுமார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யாமல் செல்ல முடியாது’ என்றார். தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் உதயநிதி மீது புகாரளித்த நிலையில், டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான போலீசார் உதயநிதியின் நீலாங்கரை வந்துள்ளனர். ஏராளமான போலீசார் உதயநிதி வீட்டை சுற்றிலும் குவிந்துள்ளதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

 அங்கு குவிந்த திமுகவினர் போலீஸ் அராஜகம் என்று கோசம் எழுப்பினர். இதற்கிடையே தஞ்சை போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தங்களது வாகனத்தில் ஏற்றி தஞ்சைக்கு கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0