திருச்சி வடக்கு மாவட்ட சேவா தள தலைவராக அன்பில் சி. விக்னேஷ் நியமனம்

Aug 4, 2026 - 10:27
 0  21
திருச்சி வடக்கு மாவட்ட சேவா தள தலைவராக அன்பில் சி. விக்னேஷ் நியமனம்

திருச்சி வடக்கு மாவட்ட சேவா தள தலைவராக அன்பில் சி. விக்னேஷ் நியமனம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கரத்தைப் பலப்படுத்த, அன்பில் சி.விக்னேஷ் திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய சேவா தளத் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் ஒப்புதலுடனும், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் பரிந்துரையினாலும் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன ஆணையை தமிழ்நாடு காங்கிரஸ் சேவா தள மாநிலத் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான வழக்கறிஞரும், முன்னாள் ராணுவ வீரருமான குங்பூ விஜயன் வழங்கியுள்ளார்.

கட்சியின் விதிகளுக்கு உட்பட்டுப் பணியாற்றுவதாக உறுதிபூண்ட புதிதாகப் பொறுப்பேற்ற அன்பில் சி. விக்னேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0