திருச்சியில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு; தவெகவை கண்டு திமுக அஞ்சுகிறது- விஜய் கடும் கண்டனம்
திருச்சியில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு; தவெகவை கண்டு
திமுக அஞ்சுகிறது- விஜய் கடும் கண்டனம்
திருச்சியில் புஸ்லி ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்திருப்பதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.திமுக அரசு தவெக எழுச்சியைக் கண்டு பயப்படுகிறது. திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தாவைக்கு செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் புஸ்லி ஆனந்த் மீது போட்ட வழக்கையும், தவெக தொண்டர்கள் மீது போட்ட வழக்கையும் திரும்ப பெற வேண்டும். மக்களிடம் செல்வாக்கை இழந்த ஆளுங்கட்சி தவெகவை கண்டு பயத்தின் உச்சத்தில் இருப்பது நிரூபணம் ஆகி இருக்கிறது என தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 13-ஆம் தேதி திருச்சியில் பிரசாரப் பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில், அதற்கு அனுமதி கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு கொடுக்க வந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், திருச்சி மாவட்ட செயலாளர் கரிகாலன் ஆகியோர் மீது திருச்சி விமான நிலைய போலீசார் நேற்று மாலை வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0