காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஜூலை 25 ல் திருவாரூரில் சிறப்பு மாநாடு- பிஆர்.பாண்டியன்

Jul 13, 2026 - 21:00
 0  44
காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஜூலை 25 ல் திருவாரூரில் சிறப்பு மாநாடு- பிஆர்.பாண்டியன்

காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஜூலை 25 ல் திருவாரூரில் சிறப்பு மாநாடு- பிஆர்.பாண்டியன்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுவுடமை போராளி பி.இராமலிங்கம் 33ம் ஆண்டு நினைவாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் தமிழக காவிரி விவசாயின் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் கோட்டூர் அருகே இருள்நீக்கியில்

மாநிலத் துணைச் செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

காவிரி டெல்டாவில் ஒட்டுமொத்தமாக குறுவை சாகுபடியை முழுமையாக இழந்துள்ளோம். சம்பாவும் கேள்விக்குறியாக உள்ளது.இதனால் வருமானத்தை இழந்த விவசாயிகள் வாழ்வதா? சாவதா வ? என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எல்.நினோ தாக்குதலால் மிகப்பெரும் பேரழிவை விவசாயிகள் சந்திக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரண நடவடிக்கைகளை துவங்க வேண்டும்.

குறிப்பாக ஏக்கர் ஒன்றுக்கு ₹15,000 வறட்சி நிவாரணமாக விவசாயிகளுக்கு வழங்கிட முன்வர வேண்டும். 

ஏற்கனவே முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டதை இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் கணக்கில் கொண்டு நிவாரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும். குறுவை இழந்த விவசாயிகள் நேரடி விதைப்பு செய்து அழிவதைப் பார்த்து பரிதவிக்கின்றனர். எனவே காப்பீடு செய்து உரிய இழப்பீடு பெற்று தர முன்வர வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் குறுவை பாதிப்பை 100 சதவீதம் பாதிக்கப்பட்டதாக தீர்மானம். நிறைவேற்றி காப்பீடு மூலம் உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.

பண்ணை குட்டைகள் அமைக்க தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், மண்ணை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். குறுவையை இழந்த விவசாயிகள் சம்பா சாகுபடியை துணிவோடு தூங்குவதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்க நிதியாக வழங்க முன்வர வேண்டும்.தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தமிழக அரசு கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.தள்ளுபடி அறிவிப்பு வரும் வரை கடன் வசூல் நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

கூட்டுறவு துறை செயலாளர் 13 பக்கம் கொண்ட தள்ளுபடி அரசாணையால் ஒட்டுமொத்த விவசாயிகளையும் தற்கொலைக்கு தூண்டுகிற வகையில் தமிழக அரசு நடவடிக்கை அமைந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேகதாட்டு அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும், சட்ட விரோதமாக செயல்படும் டி.கே சிவகுமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 22 முதல் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படும். ஜூலை 25-ல் திருவாரூரில் காவிரி டெல்டாவை மையமாக வைத்து வறட்சி நிவாரண மாநாடு நடத்த உள்ளோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார். மாநில இளைஞரணி செயலாளர் மகேஸ்வரன், திருவாரூர் மாவட்ட செயலாளர்

சரவணன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கருணநாதன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மயிலாடுதுறை மாவட்ட துணை செயலாளர் கொள்ளிடம் பண்ணீர் செல்வம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0