25 கோரிக்கைகளுடன் வேளாண் அமைச்சரை சந்தித்த பி.ஆர் பாண்டியன்
25 கோரிக்கைகளுடன் வேளாண் அமைச்சரை சந்தித்த பி.ஆர் பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று கும்பகோணத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத்தை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள்
நலனுக்காக இடம்பெறும் வகையில் 25 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.
அந்தக் கடிதத்தை பெற்றுக் கொண்ட அமைச்சர் வினோத் பி. ஆர். பாண்டியனிடம் தெரிவித்ததாவது:
தமிழக விவசாயிகள் தமிழக அரசோடு இணைந்து வேளாண் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒன்றிணைந்து செயல்படமுன் வர வேண்டும்.காய்கறிகள் பழ வகைகளை அன்றாடம் சந்தைப்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழிற்சாலைகளை உருவாக்கிட தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்.
குளிர்சாதன கிடங்குகள் மற்றும் வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆள் பற்றாக்குறை, இயந்திர மயமாக்கல் உள்ளிட்டவற்றை விரைந்து செயல்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான முழு ஆதரவுகளையும் ஆலோசனைகளையும் விவசாய அமைப்புகள் வழங்குவதை தமிழக அரசு விரும்புகிறது என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0