தவெகவில் இணையும் அதிமுக முக்கிய முகங்கள்: விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் விஜய்யுடன் கைகோர்ப்பு
தவெகவில் இணையும் அதிமுக முக்கிய முகங்கள்: விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் விஜய்யுடன் கைகோர்ப்பு
திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் இன்று தவெகவில் இணையும் நிலையில், 'மனவலியுடன் விலகுவதாக' எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் இன்று தவெகவில் இணைக்கின்றனர்.
அவர்களுடன் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் இன்று தவெகவில் இணைகிறார். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமாக கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் க.ராஜசேகரன், "அரசியல் கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள். மக்கள் நலன் குறித்த எனது பார்வை. எதிர்கால பொது வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தி, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு கனத்த இதயத்துடனும், கலங்கிய மனத்துடனும் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மகத்தான இயக்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் பொறுப்பு உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், இன்றைய தினம் முதல் மனவலியுடன் விலகுகின்றேன்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார் ராஜசேகர்.
இதேபோல் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று அமைச்சராகவும் வலம் வந்த முன்னாள் அமைச்சர் வளர்மதியும், திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.
மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அவர்களது ஆதரவாளர்கள் என பெருந்திரளாக இன்று தவெகவில் இணைகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மேற்கொண்டனர்.
தவெகவில் இணைவதற்காக இன்று காலை முதலே 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 200க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் என அதிமுக நிர்வாகிகள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.
இன்று தவெகவில் இணையும் அதிமுக நிர்வாகிகள்;
சி.விஜயபாஸ்கர்- முன்னாள் அமைச்சர், விராலிமலை
எம்.ஆர் விஜயபாஸ்கர்- முன்னாள் அமைச்சர், கரூர்
எஸ். வளர்மதி - முன்னாள் அமைச்சர், திருச்சி
எம்.எஸ்.எம். அனந்தன் - முன்னாள் அமைச்சர், திருப்பூர்
பி.கே. வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ - புதுக்கோட்டை
இளம்பை தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ - பெரம்பலூர்
ஒரத்தநாடு மா. சேகர் - தஞ்சாவூர்
சீனிவாசன் - முன்னாள் துணை மேயர், திருச்சி
மான்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ - ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆ. ராம்குமார், முன்னாள் எம்.எல்.ஏ - கும்பகோணம்
ராஜவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ - திருச்சுழி
சதன் பிரபாகர், முன்னாள் எம்.எல்.ஏ - பரமக்குடி
திருஞானசம்பந்தம், முன்னாள் எம்.எல்.ஏ - பேராவூரணி
ப. கருப்பையா - திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்
தர்ம தங்கவேல் - ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி, மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர்
ராஜசேகர் - திருச்சி கிழக்கு தொகுதி
வேலுமணி - தென் நகர் வடக்கு பகுதி செயலாளர் (சென்னை)
ஆர். ராணி - விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி, மாநில மகளிரணி துணைச் செயலாளர்
டாக்டர் இராமசாமி - மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர்
எம்.டி.ஆர். தமிழரசன் - மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர்
பாறை சிவா - மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர்
பி. காமராஜ் - மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
வழக்கறிஞர் ராஜராஜன் - மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர்
சு. சந்திரன் - மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர்
சு. சிவக்குமார் - மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
அ. சுப்பையா (எ) இளவரசன் - மாநில விவசாயப் பிரிவு துணைச் செயலாளர்
மதுரை கார்த்திக் - மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
ஆவின் செல்வம் - மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர்
வழக்கறிஞர் கதிர் - மாநில வர்த்தக அணி துணைத் தலைவர்
தென்சென்னை ராமலிங்கம் - மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
டி. டில்லி பாபு - மாநில கலைப்பிரிவு இணைச் செயலாளர்
ஏ.வி.பி. லண்டன் அசோக் - அயலக அணி பொறுப்பாளர்
கவிதா சசிக்குமார் - முன்னாள் சேர்மன், இராமநாதபுரம்
எஸ்.எம். சுந்தரராஜன் - மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
எஸ்.எஸ்.ஆர். சத்யா - மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
சு. ராஜேஷ் - மாவட்ட மாணவரணி துணைத் தலைவர், காஞ்சிபுரம் மாவட்டம்
நடிகர் சுஜன் சந்துரு
மேலூர் அருண்
ராமமூர்த்தி - மாநகராட்சி கவுன்சிலர், திருச்சி
என். முத்தமிழ்ச்செல்வன் - அன்னவாசல் கிழக்கு, ஒன்றிய செயலாளர்
சு. சுப்பையா - அன்னவாசல் மேற்கு, ஒன்றிய செயலாளர்
அ.வே. ராஜேந்திரன் - விராலிமலை வடக்கு, ஒன்றிய செயலாளர்
ஆ. திருமூர்த்தி - விராலிமலை கிழக்கு, ஒன்றிய செயலாளர்
எஸ். பழனியாண்டி - விராலிமலை மேற்கு, ஒன்றிய செயலாளர்
எஸ். நாகராஜன் - விராலிமலை தெற்கு, ஒன்றிய செயலாளர்
ஆ. இராமநாதன் - குன்றாண்டார்கோவில் மேற்கு, ஒன்றிய செயலாளர்
கே. பாலு (எ) பால்ராஜ் - குன்றாண்டார்கோவில் கிழக்கு,
பி. பாண்டியன் - கந்தர்வக்கோட்டை மேற்கு, ஒன்றிய செயலாளர்
பி.எம்.எஸ். முத்துக்குமார் - அன்னவாசல் வடக்கு, ஒன்றிய செயலாளர்
கே. கணேசன் - கரம்பக்குடி வடக்கு.ஒன்றிய செயலாளர்
மேற்கண்டவாறு அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட நிர்வாகிகள் சாரை சாரையாக தமிழக வெற்றிக்கழகத்தில் இன்று இணைவது திருச்சி உள்பட தமிழகத்தில் ஒட்டுமொத்த அதிமுகவை தமிழக வெற்றிக்கழகம் தன் வசம் ஆக்கியது என்றும் கூறலாம்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
1
Angry
0
Sad
0
Wow
0