மயிலாடுதுறையில் ஆணவக் கொலை? காதலித்து வந்த சிறுவன் சிறுமி பிரேதம் மீட்பு
மயிலாடுதுறையில் ஆணவக் கொலை? காதலித்து வந்த சிறுவன் சிறுமி பிரேதம் மீட்பு
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பார்த்திபன், 19. கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அருகேயுள்ள சாத்தங்குடி
யை சேர்ந்த 18 வயது சிறுமியை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் நேற்று இரவு தன்னை ஜாதியை சொல்லி திட்டி அடித்து விட்டதாக காதலியின் தகப்பனார் உள்ளிட்டோர் மீது பார்த்திபன் பொறையார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இன்று காலை 6 மணிக்கு சிறுமியின் தந்தை தனது மகளைக் காணவில்லை என்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் பார்த்திபனின் செல்போன் டவர் லொகேஷனை சோதனை செய்தபோது பெண் ஊரான சாத்தங்குடியில் உள்ள குமரவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தை காண்பித்துள்ளது.
அங்கு சென்று போலீசார் பார்த்தபோது காதலர்கள் இருவரும் துாக்கிட்ட நிலையில் சடலமாகி இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவரது உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பெண் வீட்டார் ஆணவக் கொலை செய்து விட்டதாக வாலிபரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே உயிரிழந்த சிறுமியின் உறவினர்களின் வாகனங்கள் மற்றும் வீட்டை எதிர்தரப்பினர் உடைத்து சேதப்படுத்தினர். இரு கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் பருவ வயது எட்டும் முன்பே இருவரும் காதலித்து வந்ததாகவும் வெளியில் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்த பெற்றோர்களிடம் இருவருமே வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இருவருமே வெளியே சென்றவர்கள் இன்று பிரேதமாக மீட்கப்பட்டுள்ளனர்.
காதலித்து வந்த இருவரும் தாமாகவே தற்கொலை செய்து கொண்டனரா, ஆணவப் படுகொலையா என விசாரணை நடத்தி வருகிறோம்.
இருவர் இறப்பு தொடர்பாக சிறுமியின் தந்தை லட்சுமி காந்தன், சூர்யா, மணிமாறன், வசந்தன் விஜி ஆகியோர் மீது சாதிய வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணையில் உட்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
2
Wow
0