காங்கிரஸ் சர்வோதய சங்கத்தினர் ராட்டையில் நூல் சுற்றி நூதன போராட்டம்
காங்கிரஸ் சர்வோதய சங்கத்தினர் ராட்டையில் நூல் சுற்றி நூதன போராட்டம்
மத்திய பிரதேச மாநிலத்தில் ராஜ்யசபாவுக்கு போட்டியிட்ட மீனாட்சி நடராஜனின் வேட்பு மனுவை திட்டமிட்டு பாஜக தள்ளுபடி செய்துவிட்டு மூன்றாம் இடத்தில் இருந்த பாஜக வேட்பாளரை தேர்வு செய்தனர். இதைக்கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கிரஸின் ஒரு பிரிவான தமிழ்நாடு சர்வோதயா சங்கம் சார்பில் இன்று ராட்டை சத்தியாகிரக போராட்டம் ஜெயந்தி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாநகராட்சி காங்கிரஸ் மாமன்ற உறுப்பினருமான எல்.ரெக்ஸ் கலந்து கொண்டார்.
இந்த அறப்போராட்டத்தில், பஞ்சாயத்து ராஜ் தேசிய செயலாளர் கடலூர் ரமேஷ், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மகள் விஜயகுமாரி, ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் மாரீஸ்வரி, சீலாசெலஸ், கள்ளக்குறிச்சி மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் பவானி, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டு ராட்டையில் நூல் சுற்றி நூதன சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் அப்பகுதி வழியாக சென்ற மக்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0