எம்எல்ஏ பதவி விலகினால் 10 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் - மக்கள் சக்தி இயக்கம் தீர்மானம்

Jun 29, 2026 - 11:28
 0  30
எம்எல்ஏ பதவி விலகினால் 10 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் - மக்கள் சக்தி இயக்கம் தீர்மானம்

எம்எல்ஏ பதவி விலகினால் 10 ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் - மக்கள் சக்தி இயக்கம் தீர்மானம்

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமை வகித்தார்.

மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், மாநில துணைத்தலைவர் முனைவர் பெரம்பலூர் பெரியசாமி, துணைச் செயலாளர் வழக்கறிஞர் அசோகன், கரூர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் சக்தி இயக்க மாநில பொதுசெயலாளர் தஞ்சை முனைவர் லெ.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அதன்படி, மத்திய அரசு இந்திய நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி மன்ற தேர்தலில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்லவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.

இளைய சமுதாயத்தை பாதிக்ககூடிய போதை ஒழிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு துரிதப்படுத்த வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பின்பு தன் சுயலாபத்திற்க்காக தன் பதவியை ராஜிநாமா செய்பவர்கள் மீது 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும். மேலும் தேர்தலுக்கான செலவுகளை அவர்களிடமே வசூலிக்கவேண்டும். ஒருவர் சட்டமன்றத்திலோ அல்லது பாராளுமன்ற தேர்தலிலோ ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக் கூடாது என உரிய சட்டம் இயற்றவேண்டும்.   

உடல் உறுப்புத்தானம் செய்யும் நபர்களின் உடலை அரசு மரியாதை செலுத்துவதுடன், குடும்பத்தின் சூழ்நிலை அறிந்து பணம் உதவி அல்லது வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர் முனைவர் முருகானந்தம், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கந்தசாமி, தஞ்சை பேரா.செல்வகுமார், திருச்சி அசோகன், விஜயகுமார், தாமோதரன், லால்குடி சண்முகம், மதுரை சேகர், கரூர் முத்து, பெரம்பலூர், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, மாவட்ட நிர்வாகிகளும், செயல்வீரர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள். 

முன்னதாக, நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாநில துணைச் செயலாளர் திருச்சி. ஆர்.இளங்கோ வரவேற்றார். முடிவில் திருச்சி மாவட்ட செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0