திருச்சி அதிமுக நிர்வாகிகள் 200 பேர் அமைச்சர் மகேஷ் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
திருச்சி அதிமுக நிர்வாகிகள் 200 பேர் அமைச்சர் மகேஷ் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்
அதிமுக கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்யபாமா உள்ளிட்டோர் நீக்கப்பட்ட நிலையில் அதிமுக மீது அதிருப்தி கொண்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி அதிமுக மாவட்ட முக்கிய நிர்வாகி இப்ராகிம்ஷா தலைமையில் 200 அஇஅதிமுக உறுப்பினர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சந்தித்து திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் ஆர்.மோகன், வட்ட கழகச் செயலாளர் எஸ்.சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் கே.பன்னீர்செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0