14 ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்புச் சான்றிதழ் பெற்ற இருளர் மாணவர்கள் 

Jun 24, 2026 - 12:36
 0  9
14 ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்புச் சான்றிதழ் பெற்ற இருளர் மாணவர்கள் 

14 ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்புச் சான்றிதழ் பெற்ற இருளர் மாணவர்கள் 

இருளர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிறப்பு சான்றிதழினை வழங்கினார். கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட சிசில் நகர், எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர் மற்றும் கிரீடு நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் இருளர் மற்றும் பழங்டியினர் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கடந்த, 2012 ம் ஆண்டு முதல் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்த கிராமங்களில் கடந்த திமுக ஆட்சியில் பல முகாம்கள் நடத்தி, பலர் சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை பெற்று பலன் அடைந்தாலும், மாணவர்களுக்கு பிறப்பு சான்றிதழுக்கு பேரூராட்சியில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் வறுமையால் கட்டணம் செலுத்த இயலாமல் அலட்சயப்படுத்தி விட்டனர். இது குறித்து அறிந்த கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவரும் வழக்கறிஞருமான கிள்ளை ரவிந்திரன் தனது முயற்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணத்தை செலுத்தி பிறப்புச் சான்றிதழ்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அதன் பேரில் எம்.ஜி.ஆர்., மற்றும் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெறாமல் இருந்த மாணவ, மாணவியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து உடனடியாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிட அறிவுறுத்தப்பட்டது. 

அதன்படி கிள்ளை பேரூராட்சி எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த, 39 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் பிறப்பு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான், கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் மலர், கிள்ளை பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவிந்திரன், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0