திருச்சியில் மழை; சுவர் இடிந்து பள்ளி மாணவி பலி

Sep 7, 2025 - 15:31
 0  3
திருச்சியில் மழை; சுவர் இடிந்து பள்ளி மாணவி பலி

திருச்சியில் மழை; சுவர் இடிந்து பள்ளி மாணவி பலி

திருச்சியில் கடந்த சில தினங்களாக கடுமையாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையினால் இன்று நண்பகல், திருச்சி இ.பி.ரோடு அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் சேகர் என்பவருக்கு சொந்தமான மண்சுவரால் ஆன ஒரு வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. 
இந்த விபத்தில் அப்பகுதியில் வசித்து வந்த கார்த்திகா (வயது 11) என்ற மாணவி இடிபாடுகளில் சிக்கி  படுகாயமடைந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர்  உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக  டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில், அங்கு வசித்து வந்த கொளஞ்சி (வயது 42) என்பவர் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
திருச்சியில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0