சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கார் ஏற்றி படுகொலை:தவெக பிரமுகர் நடத்திய பாருக்கு சீல் 

Jun 1, 2026 - 12:02
 0  138
சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கார் ஏற்றி படுகொலை:தவெக பிரமுகர் நடத்திய பாருக்கு சீல் 

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கார் ஏற்றி படுகொலை:தவெக பிரமுகர் நடத்திய பாருக்கு சீல் 

சென்னை கோயம்​பேட்​டில் பிரபல நட்​சத்​திர ஓட்​டல் ஒன்று உள்​ளது. அதன் உள்​புறம் உள்ள மது பாரில் நேற்று முன்​தினம்​இரவு 11 மணி​யள​வில் இரு தரப்பினர் மது அருந்​தினர். அப்போது, அவர்​களுக்​குள் நடன​மாடு​வ​தில் தகராறு ஏற்​பட்​டது. சிறிது நேரத்​தில் இரு தரப்​பினரும் ஒரு​வர் மீது ஒரு​வர் சரமாரி​யாக தாக்​கிக் கொண்​டனர்.

அங்​கிருந்த பவுன்​சர்​கள் இரு தரப்​பினரை​யும் உடனடி​யாக வெளி​யேற்​றினர். ஆனால் வெளி​யில் வந்​தும் இருதரப்​பினரும் மோதலில் ஈடு​பட்​டனர். அவர்​களைப் பவுன்​சர்​கள் மீண்​டும் விலக்கி எச்​சரித்து அனுப்​பினர். இந்த மோதலால் நள்​ளிர​வில் மது​பார் மூடப்​பட்​டது. மோதலில் ஈடு​பட்​ட​வர்​களில் ஒரு தரப்​பினர் 3 பைக்​கு​களில் அங்​கிருந்து அடுத்​தடுத்து புறப்​பட்​டனர். மற்​றொரு தரப்​பைச் சேர்ந்​தவர்​கள் தாங்​கள் வந்த சொகுசு காரில் கிளம்​பினர்.

கோயம்​பேடு பாலத்​துக்கு கீழே கோ​யம்​பேடு - திரு​மங்​கலம் செல்​லும் வழியில் சென்று கொண்​டிருந்தபோது ஏற்​கெனவே தகராறில் ஈடு​பட்டு முன்​னால் பைக்​கில் சென்​றவர்​களில் ஒரு தரப்​பினர் கற்​களை வீசி தாக்​குதலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது காரில் வந்​தவர்​களுக்கு ஆத்​திரத்தை ஏற்​படுத்தியுள்​ளது.

இதையடுத்​து, சொகுசு காரை அதிவேக​மாக ஓட்டி எதிர்​தரப்​பினர் மீது மோதினர். இதில், இரு சக்கர வாக​னத்தை ஓட்​டிச் சென்ற 18 வயது இளம்​பெண் தூக்கி வீசப்​பட்டு சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். பின்​னால், அமர்ந்​திருந்த 17 வயது சிறுமிக்​கும் பலத்த காயம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, கொலை​யாளி​கள் அங்​கிருந்து மின்​னல் வேகத்​தில் தப்​பினர்.

நள்​ளிர​வில் நடை​பெற்ற இந்த சம்​பவம் அந்த பகு​தி​யில் பெரும் பதற்​றத்தை ஏற்​படுத்​தி​யது. தகவல் அறிந்து கோயம்​பேடு பேருந்து நிலைய போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று உயி​ரிழந்த பெண்​ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காகக் கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். காயம் அடைந்த சிறுமியை​யும் அதே மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். தடய​வியல் நிபுணர்​கள் சம்பவ இடத்​தில் தடயங்​களைச் சேகரித்​தனர்.

போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தினர். இதில், உயி​ரிழந்த பெண் யான்சி (18) என்​பதும், விழுப்​புரம் மாவட்​டம் அனிச்​சம் குப்​பத்​தில் (இலங்கைத் தமிழர்​மறு​வாழ்வு முகாம்) வசித்​ததும், கடந்த 19-ம்​தே​தி, திரு​வள்​ளூர் மாவட்​டம் கொண்​டஞ்​சேரியைச் சேர்ந்த தோழி தம்​பிதா என்​பவர் மூலம் அறி​முக​மான, சென்னை ராமாபுரத்​தில் வசிக்​கும் மற்​றொரு தோழி​யான பவுசி தீபி​காவை (17) பார்க்க வந்​ததும் தெரிந்​தது. பின்​னர், கடந்த 10 நாட்​களாக அவரது வீட்​டிலேயே யான்சி தங்​கி​யுள்​ளார். 

இந்​நிலை​யில்​ தான் 28-ம் தேதி மாலை சினி​மாவுக்கு செல்​வ​தாகக் கூறி வெளியே சென்று மறு​நாள் காலை வீட்​டுக்கு வந்​தவர்​களைச் சிறுமி​யின் தாய் கண்​டித்​துள்​ளார். இதனால், கோபித்​துக் கொண்டு இரு​வரும் வீட்டை விட்டு வெளி​யேறியுள்​ளனர்.

பின்​னர், தங்​களது இன்​ஸ்​டாகி​ராம் நண்​பர்​கள் உள்பட 6 பேர் சம்​பவத்​தன்று மது​பாருக்கு சென்​றுள்​ளனர். அப்​போது ஏற்​பட்ட தகராறில் யான்சி கார் ஏற்​றிக் கொலை செய்​யப்​பட்​டுள்​ளார். யான்சி இலங்கை தமிழர் எனவும், பல ஆண்​டு​களுக்கு முன்​னர் இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்டு பிரச்​சினை​யால் அவரது குடும்​பத்​தினர்​ தமிழகத்​தில்​ தஞ்​சம்​ அடைந்​த​தாக​வும்​ போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்.

 முன்னதாக, ஹோட்டலில் பார் நடத்தி வரும் தவெக பிரமுகர் பாலாஜி, சட்டவிரோதமாக பணத்திற்காக சிறுமிகளை போதைக்கு அடிமையாகி அவர்களை போதையில் ஆண் நண்பர்களுடன் தவறான பாதைக்கு செல்ல துணையாக இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது. எனவே, பார் உரிமையாளரிடம், சட்டவிரோதமாக சிறுமிகளை பாருக்குள் அனுமதித்தது ஏன், அரசு விதிகளை ஏன் முறையாக பின்பற்றவில்லை என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0