தவெக கட்சி அலுவலகமாக மாறும் திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகம்; சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு  

May 28, 2026 - 19:00
 0  127
தவெக கட்சி அலுவலகமாக மாறும் திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகம்; சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு  

தவெக கட்சி அலுவலகமாக மாறும் திருவெறும்பூர் சட்டமன்ற அலுவலகம்; சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு  

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அரசு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் கொடி நிறம் போன்று வர்ணம் பூசப்பட்டிருப்பது தற்போது பெரும் சர்ச்சையையும், தொகுதி மக்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நவல்பட்டு விஜி. இவர் இதற்கு முன்பு, “அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பைகளை ஆயிரம் அடி பள்ளத்தில் கொட்டலாம்” என்று கூறி சமூக வலைதளங்களில் 'வில்லேஜ் விஞ்ஞானி' என்ற விமர்சனத்திற்கும், கேலிக்கும் உள்ளானவர்.

இந்நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கான அரசு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை, ஒரு குறிப்பிட்ட கட்சியின் அலுவலகம் போல மாற்றி, அதற்கு தவெக கட்சியின் கொடி வர்ணத்தைத் தீட்டியுள்ளார். அரசு அலுவலகத்தைப் பொதுவானதாக நடத்தாமல், கட்சி அலுவலகம் போல மாற்றிய சட்டமன்ற உறுப்பினரின் இந்தச் செயல் திருவெறும்பூர் பகுதி பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0