ஆட்சி செய்தவர்கள் எல்லாவற்றையும் அள்ளி சென்று விட்டனர்; விரைவில் திருச்சி வருகிறார் விஜய் - கு.ப.கிருஷ்ணன்

May 27, 2026 - 15:07
 0  99
ஆட்சி செய்தவர்கள் எல்லாவற்றையும் அள்ளி சென்று விட்டனர்; விரைவில் திருச்சி வருகிறார் விஜய் - கு.ப.கிருஷ்ணன்

ஆட்சி செய்தவர்கள் எல்லாவற்றையும் அள்ளி சென்று விட்டனர்; விரைவில் திருச்சி வருகிறார் விஜய் - கு.ப.கிருஷ்ணன்

திருச்சியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது; அமைச்சருக்கு நிகரான பொறுப்பை முதலமைச்சர் எனக்கு வழங்கி உள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கிராமப்புற மக்கள் வேலைக்காக நகர்புறங்களுக்கு வருகின்றனர், அவர்களுக்கு தங்க இடம் கிடையாது. அவர்களுக்கு வீடு கொடுத்து மக்களோடு மக்களாக வாழவைக்க எனக்கு இந்தத்துறையை கொடுத்து உள்ளனர். வீடு கேட்டு விண்ணப்பித்த பயனாளிகளை கண்டறிய மாவட்ட ஆட்சியர் மூலம் குழு அமைக்கப்பட்டு விண்ணப்பம் பெறப்பட்டு சரிபார்க்கப் படுவார்கள்.

சைதாப்பேட்டையில் குடியிருப்பில் தலித் மக்களுக்கு தனியாக குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளதே, இதற்கு காரணம் தவெக எம்.எல்.ஏ என குற்றம் சாட்டி உள்ளனர் குறித்த கேள்விக்கு?

சென்னையில் ஆட்சியில் இருந்த பலர் ஊழல் செய்து உள்ளனர். பதவி பறிபோனவர்கள் ஆதங்கத்தில் மக்களை தூண்டிவிட்டு கொண்டு உள்ளனர். எம்.எல்.ஏ பொறுப்பேற்று ஒருமதாம் கூட ஆகவில்லை அவர் எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும்.

குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்வதை அமைச்சரோ, எம்.எல்.ஏவோ, வாரிய தலைவரோ செய்ய முடியாது. விண்ணப்பங்கள் கணினி மூலம் ஆய்வு செய்யப்பட்டு அவை பரிசீலனை செய்து ஒதுக்கப்படும். சமூக விரோத கூடாரங்கள் எங்கும் இருக்க இந்த அரசு அனுமதிக்காது.

விவசாய கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு, கொடுக்க வேண்டும் என்கிற மனது முதலமைச்சருக்கு உள்ளது. ஆனால், இதற்கு முன் ஆட்சி செய்தவர்கள் எல்லாவற்றையும அள்ளி சென்று விட்டனர். நிதி நிலைமை சரி செய்த பின்பு ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார். சொன்னதை செய்யக்கூடியவர் தான் எங்கள் முதல்வர்.

என் துறையில் விஞ்ஞான ரீதியில் பணத்தை அவர்கள் எடுத்து சென்றுள்ளார்கள். இது குறித்து ஆய்வு செய்யப்படும் தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் வாரியத்தில் இருந்த பணம் குறைவாக உள்ளது.

ஆளுஙகட்சி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்கமாட்டோம். உண்மை இருந்தால் விசாரிக்கப்படும். நேர்மையான அதிகாரிகள் தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக ஏ.டி.ஜி.பி அருணை நன்றாக ஆய்வு செய்து தான் முதலமைச்சர் நியமித்துள்ளார்.

அதிகாரிகள் ஒருப்பக்கம் சாயக்கூடாது என தான் தேர்தல் நேரத்தில் மனு அளித்தோம். தற்போது அவர்கள் மீது குற்றச்சாட்டு இல்லை என தெரிந்த பின்பு பணியில் அமர்த்தி உள்ளோம்.

விஜய் போன்ற நல்ல தலைவர் நாட்டில் இல்லை என தெரிந்து கொண்டு அதிமுகவிலிருந்து த.வெ.கவிற்கு வந்து இணைகிறார்கள். அதை வேண்டாம் என நாம் கூற முடியாது. அரசியலில் எதுவும் நடக்கும்.

குதிரை பேரம் என்றால் என்னவென்பது புரியவில்லை, நாங்கள் அரேபியாவிற்கு குதிரை வாங்கவா சென்றோம். எம்.எல்.ஏ பதவியில் இருப்பதும், ராஜினாமா செய்வதும் அவர்களின் சொந்த விருப்பம். கட்சியில் சேர்ப்பது குறித்து நாங்கள் யாரிடமும் பேசவில்லை. 

ராஜினாமா செய்தவர்கள் த.வெ.கவில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்களா என்பதை தேர்தல் நேரத்தில் பார்த்து கொள்ளலாம்.

கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் காவிரி விவகாரத்தை கையில் எடுப்பார்கள். ஒவ்வொரு தமிழனும் மேகதாது அணையை கட்ட அனுமதிக்க மாட்டார்கள். அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடியும், எஸ்.பி.வேலுமணியும் தான் கூற முடியும். அதிமுக தரப்பில் ஆதரவு தருகிறேன் என்பவர்களை விஜய் பார்த்ததில் எந்த தவறும் இல்லை.

திருச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள திட்டஙகளை எங்கள் அமைச்சர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள எடுப்பார்கள். திருச்சி மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரைவில் முதலமைச்சர் விஜய் திருச்சிக்கு வருகை தர உள்ளார். தேதி, நேரம், இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0