திருச்சி வந்த  மு.க.ஸ்டாலின்; திமுகவினர் உற்சாக வரவேற்பு

May 17, 2026 - 23:14
May 18, 2026 - 07:40
 0  88
திருச்சி வந்த  மு.க.ஸ்டாலின்; திமுகவினர் உற்சாக வரவேற்பு

திருச்சி வந்த  திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல் முறையாக திருச்சி வந்த முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை முதல்வரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.

சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவருடன் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். நாளை (18-ம் தேதி) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த இவர்களை திமுகவினர் மிகவும் உற்சாகமாக வரவேற்றனர்.

திருச்சி வந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வரும், எதிர் கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ராசா, அருண்நேரு மற்றும் மேயர் அன்பழகன் உள்ளிட்ட திமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். திமுகவினரின் வரவேற்பை பெற்றுக் கொண்ட முன்னாள் முதல்வரும், முன்னாள் துணை முதல்வரும் சாலை மார்க்கமாக தஞ்சை சென்றடைந்தனர். தஞ்சையிலும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்குப் பின்னர் முதல் முறையாக திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0